டெல்லி தர்பார் 1911
ஜார்ஜ் மன்னரும் அவருடைய துணைவியாரும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் புதிய
தலைநகர நிர்மாணத்துக்காக டெல்லியின் கிங்ஸ்வே கேம்ப் மைதானத்தில் அடிக்கல்லை நட்ட நாளான டிசம்பர் 12ம் தேதியை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடியது இந்திரா காந்தி தேசிய கலை மையம். “From Red Fort to Raisinia Hill’’ என்னும் தலைப்பில் மிகவும் அரிய புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்றைய ஷாஜஹானாபாத் நகரில் துவங்கி ஆங்கிலேய அரசு கல்கத்தாவில் இருந்து தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றத் தீர்மானித்து 1911ல் அந்தப் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் துவக்கப்பணிகள் வரை மிகவும் சீராக தொகுக்கப்பட்ட அரிய புகைப்படங்களையும் ஆவணங்களையும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். சாந்தினி செளக், மீர்ஸா காலிப், மன்னர் பஹதூர் ‘ஷா ஜாஃபர், பிரிட்டிஷ் பிரமுகர்களின் முன்பு நடனமாடிய பெண்கள், டெல்லி நகரில் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்ட ரயில் தடங்கள் - முக்கியமாக வைஸ்ராய் மாளிகை, பாரளுமன்றம் ராஜ்பத், நார்த் மற்றும் செüத் பிளாக் கட்டிடங்கள் போன்ற கட்டடங்களைக் கட்டுவதற்கு பொருள்களை சுமந்து வந்த ரயில் தடங்கள் போன்ற அரிய வரலாற்றுப் பொக்கி‘ங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றன.
இவற்றில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவை - 1837ல் கட்டப்பட்ட லுட்லோ கேஸில் என்னும் மாளிகை, சாந்தினி செüக்கின் அந்நாளைய அகன்ற தெருக்கள் (வயிற்றெரிச்சலாக இருந்தது), 1911ல் எடுக்கப்பட்ட ஜூம்மா மசூதியின் புறத்தோற்றம் (மசூதியின் வெளியில் டோங்கா, மாட்டு வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன). இந்தியா கேட் அடிக்கல் நாட்டுதலில், 1911ல் எடுக்கப்பட்ட தீஸ் ஹஸாரி ரயில் நிலையத்தின் அபூர்வமான படம், டெல்லி மாநகரின் சிற்பிகளான எட்வின் லுட்யன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கரின் கட்டட வரைவுகள், திட்டங்கள் போன்றவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
முழு கண்காட்சியையும் பார்த்து முடிக்க ஏறத்தாழ ஐந்து மணி நேரம் பிடித்தது. கண்காட்சி முடித்து வெளியே வந்த பிறகு நீண்ட நேரம் ஏதோ ஒரு நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்து வந்த களைப்பினை உணர முடிந்தது.
ஸஞ்ஜயன்
| Other articles: |
|---|
|





