Home
வாழ்த்துக்கள்
2010ம் ஆண்டுக்கான விளக்கு விருது இந்த ஆண்டு கவிஞர் தேவதச்சனுக்கு வழங்கப்படுகிறது.
புதுமைப்பித்தன் நினைவாக வழங்கப்படும் இந்த விருதினை அமெரிக்கா வாழும் தமிழர்களின் அமைப்பான விளக்கு தமிழின் சிறந்த படைப்பாளிகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
சி.சு.செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், பூமணி, ஹெப்சிபா ஜேசுதாசன், சி.மணி, ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன் ஆகியோர் இந்த விருதினை முந்தைய ஆண்டுகளில் பெற்றுள்ளனர்.
அவரவர் கைமணல், அத்துவானவேளை, கடைசி டினோசர் ஆகியவை இதுவரை வெளிவந்துள்ள தேவதச்சனின் கவிதைத் தொகுப்புக்கள்.
கவிஞர் தேவதச்சனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கி.பென்னேஸ்வரன்
| Other articles: |
|---|
|





