பாரதி விழா
கல்கத்தாவில் பாரதி தமிழ்ச் சங்கம் பாரதி விழாவினை டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய இருநாட்களில் சிறப்புற
நடத்தியது. முதல் நாள்விழாவில் சங்கத்தின் துணைத்தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், மறுநாள் சங்கத்தின் தலைவர் டி.சி.ஏ.ஸ்ரீனிவாச ப்ரசாத் தலைமையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரு நாள்களிலும் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினரும், கன்னிமரா வாசக வட்டத்தின் செயலாளருமான பேராசிரியர் முனைவர் இராம.குருநாதன் சிறப்புரை ஆற்றினார். பாரதி பிறந்த நாளன்று அறிவியல் ஞானி முனைவர் மயில்சாமி அண்ணாதுரைக்கு பாரதி விருது வழங்கப்பட்டது. விழாவில் கவிஞர் அனிதா கிருஷ்ணமூர்த்தியின் நூலும், சு.கிருஷ்ணமூர்த்தியின் சிலப்பதிகார ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் வெளியிடப் பெற்றன. பாரதி சங்கச் செயலர் இராமையா நன்றியுரை ஆற்றினார். விழாவினைத் திருமதி சித்ரா சிவராமகிருஷ்ணனும், நக்கீரனும் சிறப்புற நடத்தினர்.
| Other articles: |
|---|
|





