விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றதும் இழந்ததும்...
பெங்களூரின் நான்கு எல்லைகளை வரையறுக்கும் விதமாக கிழக்கில் அல்சூர், மேற்கில் லால்பாக்,
வடக்கே மெய்க்ரி சர்க்கிள், தெற்கே கெம்பம்புத்தி ஏரி ஆகிய இடங்களில் கிபி 1585 to 1633 வரை நகரை ஆண்ட இரண்டாம் கெம்பகௌடாவினால் கட்டப்பட்ட மண்டபங்கள் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட நான்குமே ஒற்றைப் பாறையைக் குடைந்து செய்யப்பட்டவை. ஐந்து நூற்றாண்டுகள் தாண்டிய நிலையில் இம்மண்டபங்கள் இன்று ஊருக்கு நடுவில் வந்து விட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்.
ஆனால் நகரின் எல்லைகள், கடந்த பத்தாண்டுகளில்தான் கிடுகிடுவென விரிந்திருக்கின்றன என்பதுதான் வியப்பு.
கிழக்கே ஐடிபிபி (ஐடிபிஎல்) எழும்பி நிற்கும் ஒயிட் ஃபீல்ட்டில் இப்போது காலிலிமனைகளைத் தேடத்தான் வேண்டும். மேற்கே மைசூர் சாலையில் புறநகராக உருவான கெங்கேரி சாடிலைட் டவுன் இன்று நகரோடு சங்கமமாகி விட்டது. வடக்கே ந்யூ டவுனாக உருவெடுத்த எலஹங்காவையெல்லாம் தாண்டி தேவநஹல்லி சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டது. சுற்றிவர அங்கு ரியல் எஸ்டேட் சக்கைப் போடு போடுகிறது, நிலத்தடி நீர்மட்டம் கேள்விக்குறியாகவே இருந்தாலும். தெற்கில் எலக்ட்ரானிக் சிட்டி தாண்டி ஹோசூர் சாலையில் புறநகர்பகுதியே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு நகர் நீண்டு விட்டது தமிழ்நாட்டின் எல்லைவரை.
2011 டிசம்பரில் அடுத்தடுத்து வெளியான சில கருத்துக்கணிப்புகள் இவை: மக்கள் விரும்பி வாழத் தேர்ந்தெடுக்கும் நகரங்கள் குறித்து க்ளோபல் ஹெச் ஆர் கன்சல்டன்ஸி நடத்திய கணிப்பின்படி பெங்களூர் உலகளவில் 141þவது இடத்தில் இருப்பினும், இந்தியாவில் முதலிலிடத்தில். இதன் காரணமாக நகரின் பாதுகாப்பு, சிறப்பான கல்வி வசதி போன்றவை பாராட்டைப் பெற்றிருந்தன. பிரசித்தி பெற்ற சுற்றுலா வழிகாட்டியும் டிஜிட்டல் மீடியா பப்ளி‘ரும் ஆன லோன்லி ப்ளேனட் வெளியிட்டிருக்கும் கணிப்பில் லண்டன், மஸ்கட் ஆகிய நகரங்களுக்கு அடுத்து உலக அளவில் சிறந்த நகரமாக மூன்றாவது இடத்தில் சிலிகான் சிட்டி. ஆனால் டைம்ஸ் ஆஃப் இன்டியாவின் தேசிய அளவிலான கணிப்பிலோ அகமதாபாத், புனே, டெல்லி, மும்பைக்கு பிறகே பெங்களூர் வேலை வாய்ப்பில் முன்னணியில் இருந்தாலும் எகிறும் அன்றாட செலவுகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. விரிந்த எல்லைகளால் பெங்களூர் பெற்றது, இழந்தது இரண்டுமே இந்த வேறுபாட்டுக்குக் காரணிகளாக அமைந்து போயிருக்கின்றன.
ஐடி வளர்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவு, வேலை வாய்ப்பு, பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் குடியேற்றம் இவற்றுக்கு ஈடு கொடுக்க மாறி மாறி வந்த அரசுகள் அனைத்துமே முயற்சிகளை எடுத்தன. நகரைச் சுற்றி அவுட்டர் ரிங் ரோட், ஊரின் பல பாகங்களை இணைக்கும் இன்னர் ரிங் ரோட், சர்வதேச விமான நிலையம், மெட்ரோ மற்றும் வரவிருக்கும் பெரிஃபெரல் ரிங்ரோட் மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் இணைப்புகள் என எல்லாவற்றையும் சமாளித்து இன்று இந்தியாவின் ஐடி கேப்பிடல் எனும் பெருமையை நகருக்குச் சேர்த்துள்ளன. அடித்தட்டு மக்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வந்திருப்பது ஆரோக்கியமானது. அடிப்படை வசதிகள் ஓரளவு முன்னேறி தமது குழந்தைகளைப் படிக்க வைப்பதில் அக்கறை காட்டுகின்றனர்.
ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது எனும் வாதத்தின்படி இழந்தவற்றுக்கு முழு ஈடாகுமா பெற்றவை எனப் பார்த்தால் வருத்தங்களே மிஞ்சும். ஒரு காலத்தில் பென்ஷனர்ஸ் பேரடைஸ்’ என ராணுவ அதிகாரிகள் உட்பட ஓய்வு பெறுபவர் விரும்பித் தம் கடைசி காலத்துக்குத் தேர்ந்தெடுக்கும் சொர்க்கமாக பெங்களூர் இருந்ததன் காரணம் அதன் சீதோஷ்ண நிலை. இப்போது மெட்ரோ, சாலை விரிவாக்கங்கள் என்ற பெயரில் சுமார் நான்காயிரத்துக்கும் (பத்திரிகை புள்ளி விவரம்) மேலான பலநூறு வயதான மரங்களை இழந்து கோடையில் தகிக்கிறது நகரம். நகருக்கு வெளியே மாற்றாக நட்டிருக்கிறோம் என சொல்லப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப் படுகின்றனவா? அவை வளர்ந்து வரும் போது அந்த இடம் வரை நகரம் நீண்டு அவையும் பலி கொடுக்கப்படுமா போன்ற கேள்விகளும் மனதுள் எழுகின்றன.
மல்லேஷ்வரம் சாங்கிடேங்க் முனையில் அமைந்த கோட்டையின் மேல் குதிரை மீது வீற்றிருக்கும் வீரசிவாஜி சிலை நேர்கொண்டு பார்க்கும் சாலை “சாங்கி ரோட். அகன்ற இச்சாலையின் இருபுறமும் அடர்ந்துயர்ந்த அழகு மரங்கள் வரிசைகட்டி நிற்பது பார்ப்பவர் மனதை அள்ளும். மெட்ரோவுக்காக இவறóறை வெட்டிச்சாய்க்க ஒன்றரை வருடம் முன் அரசு முடிவெடுத்த போது பதட்டத்துடன் வீதிக்குப் போராட வந்த பொதுமக்களில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களும் அடக்கம். ஞாயிறு காலைகளில் அந்தப் பக்கம் சென்றால் மரங்களைக் காப்போம், “இயற்கையைப் போற்றுவோம்’ போன்ற வாசகங்களைத் தம் கைப்பட எழுதிப் பிடித்தபடி பள்ளிச் சிறுவர்கள் சிவாஜி சிலைமுன் நிற்பதைக் காண முடிந்தது மாதக்கணக்கில். இதன் பலனாக நீதிமன்றம் விதித்த தடை உத்திரவு அரசு கொடுத்த அழுத்தத்தில் திரும்பப் பெறப்பட்டு விட்டது நவம்பரில். டிசம்பரில் கோடாரியின் முதல் வெட்டுக்குப் பலியான மரத்தின் கீழ் மெட்ரோவுக்கான பூஜை போடப்பட்டபோது மனம் வெதும்பி எவரும் அப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. விரல் விட்டு எண்ணுமளவில் ஏழெட்டு பேர்களே நின்றிருந்ததைப் பத்திரிகையில் படமெடுத்துப் போட்டிருந்தார்கள்.
சுற்றுலாப் பயணிகள் தவறாத இடம் விதான் சௌதா. சாலையைத் தாண்டி உயர்நீதிமன்ற வளாக
வாசலிருந்து அதைப் படமெடுப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இப்போது அதன் கம்பீரம் சாலையைக் கடக்கவிருக்கும் மெட்ரோ பாதை வேலைகளினால் கலைந்து விட்டது. வேலை முடிந்த பின்னுமே விதான் சௌதா, அதன் அச்சு நகலான விகாஸ் சௌதா இரண்டின் அழகையும் “முழுமையாகக் கண்ணுள் வாங்கிப் பார்ப்பதும் படமெடுப்பதும் இனி இயலாத ஒன்று. மக்களின் அதீத சலிலிப்புக்கு அரசு ஆளாவதன் முதன்மையான காரணம் தொலைநோக்குப் பார்வை இல்லாததே. வொயிட் ஃபீல்டில் ஐடிபிஎல் உருவான சமயத்திலேயே அரசு மெட்ரோவை ஆரம்பித்திருந்தால் இன்று அதனால் இழப்பவற்றுக்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும். இரண்டு பெட்டிகளுடன் ஒரேயொரு பாதையில் மட்டுமே ஓட ஆரம்பித்திருக்கும் மெட்ரோ, வேலைகள் முடிந்து முழுமையான பயன்பாட்டுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க நேருமென்றே தோன்றுகிறது. இன்னொரு பக்கம் பெரும் பொருட்செலவில் போட்ட சாலைகளை மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் தோண்டிப் பாலங்கள் கொண்டு வருவது போன்றதைச் சளைக்காமல் செய்து மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறது அரசு.
பிற இந்திய நகரங்கள், மாநிலங்களை விட பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருப்பது பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் எகிறும் விலைக்கு வித்திட்டிருப்பதுடன், வீட்டு வாடகை, தினசரிப் போக்குவரத்துச் செலவு, பள்ளிக் கட்டணம் போன்றனவும் நடுத்தர வர்க்கங்களைத் திக்கு முக்காடவே வைக்கிறது.
கலைகளைக் கொண்டாடும் சித்ரகலா பரிஷத்
நான்கு ஏக்கர் பரப்பில் பெங்களூரின் மையப்பகுதியான குமர க்ருபா ரோடில் அரை நூற்றூண்டு காலப் பாரம்பரியத்துடன் செயல்பட்டு வரும் ‘சித்ரகலா பரிஷத்’தின் கலைக்கல்லூரியும் சரி, வருடம் முழுவதும் அதன் ஆர்ட் காம்ப்ளெக்ஸில் நடைபெறும் சிற்ப, ஓவியக் கண்காட்சிகளும் சரி, சர்வதேசப் புகழும் கவனமும் பெற்று வருபவை. கலைஞர்களின் படைப்புகளைப் பன்னாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிறு அன்று கல்லூரி இருக்கும் சாலையின் இருபுறமும் ஓவியர்களுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்து நிர்வாகம் நடத்துகிற சித்திரச் சந்தையில் கலந்து கொள்ள நாடெங்கிலுமிருந்து விண்ணப்பங்கள் குவியும்.
டிசம்பர் 15 முதல் 22 வரை ‘வாழ்க்கையும் இயற்கையும்’ (லைஃப் அன்ட் நேச்சர்) என்ற தலைப்பில் தன் ஓவியங்களைக் காட்சிப் படுத்தியிருந்தார் தில்லிலிவாழ் ஓவியரும், சிற்பக்கலை வல்லுநரும், கார்ட்டூனிஸ்டுமான ஏ.வி. பிரசாந்த். இவர் பிரகதி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ், தில்லியின் சிஇஓ என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைந்து போன பால்ய நினைவுகளைத் தன் ஓவியங்களில் மீட்டெடுப்பதன் மூலமாக அக்காலத்திய கிராமிய வாழ்வின் சிறப்புகளைத் தன் பிள்ளைகளுக்குக் காட்ட முயன்றிடுவதாகக் குறிப்பிட்டார். ‘தடை’ எனும் தலைப்புடைய ஓவியத்தில் உள்ள பெரிய மீன் தானே என்றும் அதைச் சுற்றித் தொங்கும் தூண்டில் கொக்கிகள் தான் வாழ்வில் சந்திக்கும் இடையூறுகள் என்றும் விளக்கினார்.
பெங்களூர் ஐ.ஜி. ஆஃப் போலிஸ் கோபால் பி ஹொசுர் திறந்து வைக்க, டிசம்பர் 14 முதல் ஆரம்பமானது உடுப்பி
ஃபவுண்டேஷன் பிரசிடெண்ட் வசந்த் ராவ் அவர்களது ‘காண்ட்டெம்ப்ரரி சம்மிட், ரித்தி அண்ட் சித்தி’ ஒருவாரக் கண்காட்சி. தற்கால ஓவியங்களுடன், குழந்தைகளுக்கான சித்திரங்கள், பலவிதமாக விநாயகர், சேவற் சண்டை, இவற்றுடன் பசுவைப் போற்றும் விதமாகவும் நூற்றுக்கும் மேலான ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். அனைத்து வித ஓவியங்களையும் வரைவது தன் தனித்தன்மை எனக் குறிப்பிட்டார்.
கல்கத்தா ஓவியர்களின் படைப்புகள் வரவேற்றன அடுத்தக் கூடத்தில். அந்நகரின் தெருவாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு அற்புதமான ஓவியங்களைப் படைத்திருந்தார் ஓவியர் பிரதீப் கோஷ். துறவு நிலையை வெளிப்படுத்துவதாக இருந்தன பெண் ஓவியர் மஹøவா மித்ராவின் சித்திரங்கள்.

ராமலெக்ஷ்மி
| Other articles: |
|---|
|





