நூல்வாசல்
Books
வடக்கு வாசல் பதிப்பக வெளியீடுகள்
ஜூலை 29, 30 மற்றும் 31, 2011 ஆகிய நாட்களில் புது டெல்லி இராமகிருஷ்ணபுரம் திருவள்ளுவர் கலையரங்கில் அமரர் சுப்புடு நினைவில் ஒரு இசைவிழா மற்றும் வடக்கு வாசல் பதிப்பகத்தின் வெளியீட்டு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. வடக்கு வாசல் பதிப்பகத்தின் ஐந்து நூல்கள் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டன.
![]() |
விஞ்ஞானி, கவிஞர் மற்றும் சிந்தனையாளர் ய.சு.ராஜன் அவர்கள் பிப்ரவரி 2007 துவங்கி மே 2010 வரை வடக்கு வாசல் இதழ்களில் ஒவ்வொரு மாதமும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. விஞ்ஞானம், வேளாண்மை, சுற்றுச்சூழல், தொழிற்கல்வி, தொழில் நுட்பம், பயங்கரவாதம், உயர்கல்வி போன்ற பல்வேறு விஷயங்களின் மீது ஆக்கபூர்வமான வகையில் தன்னுடைய பார்வையைப் பதிவு செய்து எளிய அணுகுமுறை கொண்ட தீர்வுகளை வழங்குகிறார். இந்த நூல், இளைஞர்களுக்கும், சமூக அக்கறை கொண்டோருக்கும், மிகவும் பயனுள்ள நூலாகும். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார். பக்கங்கள்- 184 விலை ரூ.150/- |
![]() |
பின்தங்கிய மாவட்டமான கிருஷ்ணகிரியில் கேம்பிரிட்ஜ் கல்வி ஆய்வு மையத்தைத் திறம்பட நடத்தி வரும் சி.டி.சனத்குமார் மாற்றுத்திறன் கொண்டவர். இளம் வயதில் பிள்ளை வாதத்தால் பீடிக்கப்பட்டதால் சக்கர நாற்காலியில் வலம் வரும் இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கல்விச் சக்கரத்தை மிகவும் திறமையுடன் இயக்கிக் கொண்டு வருகிறார். பள்ளியை விட்டு நிற்கும் சிறுவர், சிறுமியர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டு அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்பும் மகத்தான பணியை செய்து வருகின்றவர். சீரிய சிந்தனையாளர். பள்ளிக் கல்விச் சீரமைப்பு, குழந்தைகளின் மனநலம், உடல் நலன், குறித்து அக்கறை காட்டும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் அணிந்துரை வழங்கி இந்த நூலை சிறப்பித்து இருக்கிறார்கள். பக்கங்கள்- 176 விலை ரூ.150/- |
![]() |
ராகவன் தம்பி என்னும் பெயரில் வடக்கு வாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. ஆசிரியரின் நாடக மேடை அனுபவங்கள், கோமல் சுவாமிநாதன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியன் போன்ற இலக்கியச் சிற்பிகளுடன் எதிர்கொண்ட அனுபவங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், குழந்தைகளின் உளவியல், கிருஷ்ணகிரி மற்றும் டெல்லி வாழ்க்கையில் இவர் சந்தித்த அனுபவங்களை சற்றே அங்கதம் கலந்த தொனியில் அலசும் கட்டுரைகளின் தொகுப்பு. பக்கங்கள் - 312 விலை ரூ.225/- |
![]() |
வடக்கு வாசல் முதல் இதழில் துவங்கி, பல இதழ்களில் வெளிவந்த பல்வேறு அறிஞர் பெருமக்களின் தொகுப்பு இந்த நூல். டெல்லி மட்டும் அல்லாது பல்வேறு இந்தியப் பெருநகரங்களில் இருந்து வந்த அறிஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், விஞ்ஞானிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலர் ரெகுநாதன், கட்டடவியல் அறிஞர் எஸ்.இராமமிருதம், மூத்த எழுத்தாளர் ஏ.ஆர்.ராஜாமணி, மொழிபெயர்ப்பாளர் ஹெச்.பாலசுப்பிரமணியன், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சமையல் கலைஞர் சுல்தான் மொய்தீன், ஒலி வடிவமைப்பாளர் எஸ்.மனோகரன், பொள்ளாச்சி கணேசன், நீரியல் வல்லுனர் ராமஸ்வாமி அய்யர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் ராஜாமணி, பேராசிரியர் கி.நாச்சிமுத்து, பரதக்கலைஞர் ஜஸ்டின் மெக்கார்த்தி, கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ஜி.பாலச்சந்திரன், ஐஏஎஸ் ஆகியோரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நேர்காணல்கள் தமிழ்ச் சூழலில் பெருமளவு பேசப்பட்டவையாகும். சுரேஷ் சுப்பிரமணியம் இந்த நூலுக்கு முன்னுரை வழங்கி இருக்கிறார். பக்கங்கள் - 312 விலை ரூ.250/- |
![]() |
இலக்கியம், நவீன நாடகம், வேதாத்திரியம், யோகக்கலை, தியாணம் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும், பெண்ணியக் கோட்பாடுகளில் தெளிந்த பார்வைகள் பொதிந்த வெளிப்பாடுகளுடன் இயங்கும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள் எழுதி வடக்கு வாசல் அடங்கலாக, பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. பாவண்ணனின் முன்னுரையுடன் இந்த நூல் வெளியிடப்படுகிறது. பக்கங்கள் - 296 விலை ரூ.225/- |
![]() |
பல்வேறு படைப்பாளிகள் சங்கீதம் குறித்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. 2006ல் நடைபெற்ற இளவேனில் இசைவிழாவின் போது இந்த நூல் வெளியிடப்பட்டது. எஸ்.ஷங்கரநாராயணன் தொகுத்து வழங்கி இருக்கிறார். விலை ரூ.180/- |
![]() |
2008ல் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்ட வடக்கு வாசல் இலக்கிய மலர் தமிழின் முன்னணி படைப்பாளிகளின் படைப்புக்களுடன், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. விலை ரூ.50/- |
மேற்காணும் நூல்களைப் பெறுவதற்கு City Union Bank கிளைகளில் உங்கள் ஊரிலேயே எங்கள் கணக்கில் செலுத்தலாம். அஞ்சல் செலவுக்கு ரூ.50/- சேர்த்து அனுப்பவும்.
VADAKKU VAASAL PUBLICATIONS.
Account no.c/a 102109000127274
CITY UNION BANK
IFSC CODE: CIUB0000102
18/7, WEA Arya Samaj Road,
Karol Bagh,
New Delhi-110 005 .
பணம் செலுத்திய விபரத்தை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.காசோலை, வரைவோலை, பணவிடை வழியாகவும் Vadakku Vaasal Publications என்னும் பெயருக்கு அனுப்பலாம். வெளியூர் காசோலை மற்றும் வரைவோலைக்கு தயவு செய்து ரூ.50/- சேர்த்து அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி-
Vadakku Vaasal Publications
5A/11032, Second Floor,
Gali No.9, Sat Nagar, Karol Bagh,
New Delhi-110 005.
Phone- 011-25815476 / 011-65858656
Mobile: 9910031958
e-mail:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இணையம் வழி நூல்களைப் பெற்றுக் கொள்ள இங்கே சொடுக்கவும்...
Last Updated (Thursday, 10 November 2011 07:04)













